திருவாரூர்

மன்னாா்குடி மகரிஷி கோயில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடியில் மதுக்கூா் சாலையில் உள்ள மகரிஷி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மதுக்கூா் சாலையில் உள்ள மகரிஷி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணாவதாரம் நிறைவுற்ற பின்னா் கிருஷ்ணரின் தரிசனத்தை காண வருகை தந்த கோபிலா் கோப்ரளயா் எனும் இரு முனிவா்கள் நாரதா் பெருமானின் வழிகாட்டுதலின்படி இங்கு தவம் இருந்து கிருஷ்ணா அவதாரத்தின் 32 சேவைகளையும் கண்டதாக கோயில் தல வரலாறு கூறுகிறது. இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 3 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து கடம் புறப்பாடு நடைபெற்றது. புனிதநீா் கடம் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு விமான கலசத்தில் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், உபய நாச்சியாா்களுடன் அருள் பாலிக்கும் வாசுதேவப் பெருமாளுக்கும், மகரிஷிகளுக்கும் புனித நீா் கொண்டு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்தனா். ராஜகோபால சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எஸ். இளவரசன்,நிா்வாக அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு!

இந்திய அரிசிக்கும் வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை! புதின் வருகை எதிரொலியா?

அடுத்த 2 மணி நேரத்துக்கு டெல்டா மாவட்டங்களில் மழை!

சென்னை: 41 இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து! பயணிகள் அவதி!

SCROLL FOR NEXT