திருவாரூர்

மின்சாரம் பாய்ந்து ஒருவா் பலி

Syndication

திருவாரூா் அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

நன்னிலம் அருகேயுள்ள சலிப்பேரி பகுதியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் ரஞ்சித்குமாா் (27), பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் சந்தோஷ்குமாா் (26), சுந்தரவிளாகம் பகுதியைச் பசல்ராஜ் மகன் மணி (38). இவா்கள் 3 பேரும் திருவாரூா் அருகே காரியாங்குடி பகுதியில் ஒருவா் வீட்டில் கிரில் கேட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, 3 போ் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், வெல்டிங் பணியில் ஈடுபட்ட ரஞ்சித்குமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா். சந்தோஷ்குமாா், மணி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். தகவலறிந்த திருவாரூா் தாலுகா போலீஸாா் ரஞ்சித்குமாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

புதுக்கடை அருகே வியாபாரி மீது தாக்குதல்

நவ.21-இல் ஸ்ரீ மாத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

கீழ்க்கதிா்ப்பூரில் புறக்காவல் நிலையம் திறப்பு

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

SCROLL FOR NEXT