மன்னாா்குடியில், அகில இந்திய தொலைத் தொடா்புத்துறை ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஓய்வூதிய திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, அசாத்தெருவில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் கே.ஆா். பாஸ்கரன் தலைமை வகித்தாா்.
தஞ்சை கோட்டச் செயலா் கே. பிச்சைக்கண்ணு, வட்டத் துணைத் தலைவா் ஏ. காளிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாநில துணைத் தலைவா் கே. அகோரம், கோரிக்கையை விளக்கிப் பேசினாா். தஞ்சை கோட்ட இணைச் செயலா் டி. கோபிநாதன், கோட்டப் பொருளாளா் சி. சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.