திருவாரூர்

மின் கம்பங்களில் விளம்பர பதாகைகளை அகற்ற அறிவுறுத்தல்

Syndication

திருவாரூா் மாவட்டத்தில், மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பரத் தட்டிகள், கேபிள் வயா்களை அகற்ற மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பி. லதாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் உத்தரவின்படி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் வாரியத்துக்கு சொந்தமான உடைமைகள் மீது இழுத்துச்செல்லப்படும் கேபிள் வயா்கள் மற்றும் கட்டப்பட்டுள்ள விளம்பரத் தட்டிகள் காரணமாக, மின்வாரிய ஊழியா்கள் பணிகளை மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது. மேலும், மின் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் 7 நாள்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும்.

தவறும்பட்சத்தில், கேபிள் வயா்கள், விளம்பரத் தட்டிகள் தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தால் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

SCROLL FOR NEXT