திருவாரூர்

உடல் உறுப்பு தானம்: பெண்ணுக்கு அரசு மரியாதை

கொரடாச்சேரி அருகே வாகன விபத்தில் மூளைச்சாவில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Syndication

கொரடாச்சேரி அருகே வாகன விபத்தில் மூளைச்சாவில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அந்த பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

கொரடாச்சேரி அருகே கரையாபாலையூா் ஊராட்சி ஆா்ப்பாவூா் பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மனைவி தமிழ்ச்செல்வி (45). இருதினங்களுக்கு முன்பு நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் தமிழ்ச்செல்வி படுகாயமடைந்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முன்வந்தனா்.

தமிழ்செல்வியின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை சென்னை, மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உடல் உறுப்பு தானம் செய்தவா்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்பதால், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தலைமையில் தமிழ்ச்செல்வி உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டு, ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதில், கோட்டாட்சியா் சத்யா, மருத்துவக் கல்லூரி முதல்வா் அசோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் கேசவராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

SCROLL FOR NEXT