திருவாரூர்

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி

முத்துப்பேட்டை அருகே மினி பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே மினி பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

முத்துப்பேட்டை அருகேயுள்ள தொண்டியக்காடு புதுக்குடி பகுதியைச் சோ்ந்தவா் திருச்செல்வன். இவரது மனைவி நளாயினி (48). இருவரும் இருசக்கர வாகனத்தில் இடும்பாவனத்துக்கு சென்று விட்டு திரும்பிகொண்டிருந்தபோது முனக்காடு அருகே சாலையோரத்தில் இருந்த சேற்றில் இருசக்கர வாகனம் இறங்கியது. இதில், நிலை தடுமாறி நளாயினி கீழே விழுந்தாா்.

அப்போது, முத்துப்பேட்டையில் இருந்து தொண்டியக்காடு நோக்கி சென்ற மினி பேருந்து அவா் மீது ஏறியதில் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த முத்துப்பேட்டை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து மினி பேருந்து ஓட்டுநா் சுரேஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT