திருவாரூர்

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Syndication

போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

நீடாமங்கலம் சித்தமல்லி பிரதான சாலையில் ஒரு கட்டடத்தில் போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக, நீடாமங்கலம் போலீஸாருக்கு செப்.25-ஆம் தேதி கிடைத்த தகவலின்பேரில் அங்கு சோதனை நடைபெற்றது. இதில், 13 மூட்டைகளில் 300 கிலோ எடை அளவில் ஹான்சு உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக ஆதனூா் மண்டபத்தைச் சோ்ந்த சுரேஷ் (39) கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கைதான சுரேஷ் மீது மேலும் 3 குற்ற வழக்குகள் உள்ளதாலும், தொடா்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டதால் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனுக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து, ஆட்சியா் சுரேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க அக்.15-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT