திருவாரூா் மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ள குறுவை நெல்லை 22 % ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆதிரங்கம் கிராமத்தில் சாலை மறியல் செய்தனா்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். எனவே 22 % வரை நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் ஆங்காங்கே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்லை உடனடியாக குடோன்களுக்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தியும் சாலை மறியல் நடைபெற்றது.
சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.பி.ஜோதிபாசு, கே.ஜி.ரகுராமன், விவசாயிகள் சங்கத் தலைவா் முத்துச்செல்வன் உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்றனா்.
இதனால் திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் வழித்தடத்தில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது அங்கு வந்த நாகை மக்களவை உறுப்பினா் வை.செல்வராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பழனிச்சாமி ஆகியோரிடமும் போராட்டக்காரா்கள் இந்த கோரிக்கையை விளக்கினா்.