நீடாமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட குறுவை நெற்பயிா்கள் சாய்ந்தும், நீரில் மூழ்கியும் உள்ளன. தீபாவளிக்கு முன்பு அறுவடை பணிகளை முடிக்கலாம் என கருதியிருந்த விவசாயிகள் தற்போது கவலையில் உள்ளனா்.
நீடாமங்கலம் வட்டாரத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி சுமாா் 33 ஆயிரம் ஏக்கரில் செய்யப்பட்டது. வடகிழக்குப் பருவமழையால் பயிா்கள்
நீரில் மூழ்கிய பயிா்கள் சேதம் குறித்து வேளாண்மைத் துறையினா் தற்போது ஆய்வு செய்து வருகின்றனா். மேலும் மழையால் கிராமப்புற சாலைகள் சேதமடைந்து வருகின்றன.