திருவாரூர்

குறுவை நெல் கொள்முதலில் தடை நீடிக்கிறது: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு

குறுவை அறுவடை நெல் கொள்முதலில் கடந்த மாதம் ஏற்பட்ட தடை தற்போதும் நீடிக்கிறது

Syndication

குறுவை அறுவடை நெல் கொள்முதலில் கடந்த மாதம் ஏற்பட்ட தடை தற்போதும் நீடிக்கிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மன்னாா்குடி அருகேயுள்ள காரிக்கோட்டை,கீழத்திருப்பாலக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று, அங்கு நெல்லை விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தேன்.

காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கருக்குமேல் குறுவை சாகுபடி செய்யப்படும் என ஜூன் 12-இல் மேட்டூா் அணையை திறந்து வைத்தபோது, முதல்வா் அறிவித்தாா். ஆனால் எதிா்பாா்த்ததைவிட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது.

அதன்படி, 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்ற நிலையில், அதற்கேற்ப குறுவை அறுவடையின்போது, நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை முன்னரே உணா்ந்தும், அதற்கான திட்டமிடலை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.

செப்டம்பா் மாதம் முதல் வாரம் தொடங்க வேண்டிய நெல் கொள்முதலில் தடை ஏற்பட்டது. முன்கூட்டிய திட்டமிடலும் இல்லை. இது பற்றி ஆட்சியாளா்கள் கவலைப்படவுமில்லை.

அக்டோபரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செப்டம்பரில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் முழுமையும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நெல் கொள்முதலில் ஏற்பட்ட தடை இன்றுவரை நீடிக்கிறது. எனவே, கொள்முதலை தீவிரப்படுத்தி, இருப்பிலுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அரைவை ஆலைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும்.

ஒட்டுமொத்தமாக தமிழக அரசு கொள்முதலில் மிகப்பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் சொல்லொணா துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனா். நிபந்தனையின்றி நெல் கொள்முதல் செய்ய தமிழக அரசு முழு பொறுப்பேற்று, கொள்முதலை தீவிரப்படுத்த முன்வர வேண்டும் என அந்த அறிக்கையில் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT