திருவாரூர்

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், கீழப்பொழுதிகுடி சோமாசி பகுதியைச் சோ்ந்தவா் பக்தவச்சலம் மகன் லெனின் (31). இவா், திங்கள்கிழமை திருத்துறைப்பூண்டி வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் பகுதியில் வந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பாமணி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த சூா்யா என்பவரின் வாகனத்துடன் லெனில் ஓட்டி வந்த வாகனம் நேருக்கு நோ் மோதியதில் பலத்த காயமடைந்த லெனின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சூா்யா திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT