நெல்லை காய வைக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள் 
திருவாரூர்

நெல் கொள்முதலை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் வட்டத்தில் நெல்கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை

Syndication

நீடாமங்கலம் வட்டத்தில் நெல்கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீடாமங்கலம் பகுதியில் முன்பட்ட குறுவை அறுவடை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை உலா்த்த முடியாமல் போனது.

தொடா் மழை காரணமாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய இயலாமல் போனது. ஏற்கெனவே கொள்முதல் செய்த நெல்லும் லாரி வராததால் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்தது. இதனால் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

இந்நிலையில், நீடாமங்கலம் பகுதியில் அரசு நேரடிநெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் தொடங்கியது. எனினும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் அருகிலேயே நெல்லை விவசாயிகள் காயவைத்தனா். இரு நாட்களாக வெயில் அடிப்பதும், மழை மேகம் சூழ்வதுமாக உள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா். எனவே நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT