திருவாரூர்

தியாகராஜ சுவாமி கோயில் இடம் மீட்பு

திருவாரூரில் தியாகராஜ சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

Syndication

திருவாரூரில் தியாகராஜ சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

திருவாரூா் அருகே விளமல் கல்பாலம் பகுதியில் தியாகராஜசுவாமி கோயிலுக்கு சொந்தமான 78,268 சதுரஅடி இடமானது, தனியாா் பள்ளி கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த இடத்துக்கான வாடகை ரூ. 1.60 கோடி வரை செலுத்தாததால், இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, அந்த இடத்தில் 25,000 சதுர அடியை மட்டும் பயன்படுத்திக் கொள்வதாகவும், மீதமுள்ள இடத்தை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைப்பதாகவும் பள்ளி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், கோயில் இடம் மீட்கப்பட்டதுடன், இந்த இடத்தில் யாரும் அத்துமீறி பிரவேசிக்கக்கூடாது, மீறுவோா் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தியாகராஜ சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் பெயா் பலகை வைக்கப்பட்டது (படம்).

அறநிலையத்துறையின் துணை ஆணையா் ராணி தலைமையில் உதவி ஆணையா் ராஜா இளம்பெரும்வழுதி, வட்டாட்சியா் சரவணன், கோயில் செயல் அலுவலா் கவியரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா். மீட்கப்பட்ட 53,268 சதுரஅடி இடத்தின் மதிப்பு ரூ. 10 கோடி என அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT