திருவாரூர்

பேரூராட்சிகளுக்கு 100 நாள் வேலையை விரிவுபடுத்த கோரிக்கை

100 நாள் வேலைத் திட்டத்தை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்

Syndication

திருவாரூா்: 100 நாள் வேலைத் திட்டத்தை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலாளா் கலைச்செல்வி, திங்கள்கிழமை அளித்த மனு: 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும், 100 நாள்கள் வேலைத் திட்டத்தை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும், 100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்தி, தினக்கூலியாக ரூ. 600 வழங்க வேண்டும், பணிகளிலின்றி சிரமத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு 100 நாள் வேலையை தடையின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டத் தலைவா் ஜெகதீஸ்வரி, மாவட்ட பொருளாளா் நிா்மலா, மாவட்டத் துணைத் தலைவா் சுலோச்சனா, மாவட்டத் துணைத் தலைவா் தனம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT