புதுதில்லி

சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக குடிநீர் விநியோக நிலவரம் என்ன?: 'டிஜேபி' அறிக்கை தர முதல்வர் உத்தரவு

தில்லியில் குடிநீர் விநியோகத்தில் தீவிர மேலாண்மை பிரச்னைகள் இருப்பதால், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக குடிநீர் வழங்கல்

DIN

தில்லியில் குடிநீர் விநியோகத்தில் தீவிர மேலாண்மை பிரச்னைகள் இருப்பதால், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக குடிநீர் வழங்கல், நுகர்வு குறித்த நிலவரத்தை அறிக்கையாக அளிக்குமாறு தில்லி ஜல் போர்டுக்கு (டிஜேபி) முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தில்லி ஜல் போர்டு தலைமைச் செயல் அதிகாரிக்கு முதல்வர் கேஜரிவால் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தில்லியின் மக்கள் தொகை 2 கோடியாகும். நாளொன்றுக்கு 900 மில்லியின் காலன் தண்ணீர் இருப்பு உள்ளது.
இதன் மூலம் தலைநரில் நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு தேவையான 170 லிட்டர் தண்ணீர் இருப்பு உள்ளது. இது உலகளவில் அதிமான ஒன்றாகும்.
நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்தில் 150 லிட்டர், ஜெர்மனியில் 115 லிட்டர், நெதர்லாந்தில் 125 லிட்டர், டென்மார்கில் 131 லிட்டர், பெல்ஜியத்தில் 107 லிட்டர் என உள்ளது.
நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 170 லிட்டர் தண்ணீரை வழங்குவதற்கான இருப்பு தில்லியில் இருந்தும், ஒவ்வொரு வீட்டுக்கும் சில மணிநேரம் கூட தண்ணீரை வழங்க நம்மால் முடியவில்லை.
இது தீவிரமான மேலாண்மை பிரச்னை இருப்பதையே காட்டுகிறது.
இதனால், தொகுதிவாரியாக தண்ணீர் எங்கே, எவ்வளவு அளவு வழங்கப்பட்டு வருகிறது என்பது தொடர்பான நிலவர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
தில்லியின் சில பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு இருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, குடிநீர் விநியோகத்தை சீரமைக்கும் நோக்கில் முதல்வர் கேஜரிவால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT