புதுதில்லி

தில்லியில் ரூ.10 லட்சம் திருடிய பணிப் பெண் அஸ்ஸாமில் கைது

வேலை செய்த வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.10 லட்சத்தை திருடியதாக பணிப் பெண்ணை அஸ்ஸாம் மாநிலத்தில் தில்லி போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.6 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டதாக போலீஸார்

DIN

வேலை செய்த வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.10 லட்சத்தை திருடியதாக பணிப் பெண்ணை அஸ்ஸாம் மாநிலத்தில் தில்லி போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.6 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி தெற்கு மாவட்டக் காவல் துணை ஆணையர் ஈஸ்வர் சிங் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லி சைனிக் ஃபார்ம் பகுதியில் உள்ள மேற்கு என்கிளேவ் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சரண் சிங். இவர் மே 30-ஆம் தேதி தெற்கு தில்லி நேப் சராய் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில், 'சம்பவத்தன்று எனது மனைவியை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றிருந்தேன். வீட்டில் மூன்று பணியாளர்கள் வேலையில் இருந்தனர்.
இந்நிலையில், விமான நிலையம் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய போது, வீட்டில் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ.10 லட்சம் காணாமல் போனது தெரிய வந்தது.
மேலும், வீட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்தியாஷ் கான் மாயமாகிவிட்டார். அவர் பணத்தைத் திருடிச் சென்றிருக்கலாம்' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, போலீஸார் அஸ்ஸாம் மாநிலத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலம், நாவோகாவ்ன் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இம்தியாஷ் கான் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் ஹர்சரண் சிங் வீட்டில் இருந்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.
அவரிடமிருந்து திருட்டுப் பணம் ரூ.6 லட்சம் மீட்கப்பட்டது. மேலும், திருட்டுப் பணத்தில் வாங்கிய ஆடம்பர மின்னணு சாதனங்களும் மீட்கப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஈஸ்வர் சிங் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT