புதுதில்லி

சிஆர்பிஎஃப் அதிகாரி கொலை வழக்கு: கிராம தலைவர், மகன் கைது

ஹரியாணாவில் மத்திய துணை ராணுவ (சிஆர்பிஎஃப்) அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவரும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.

DIN

ஹரியாணாவில் மத்திய துணை ராணுவ (சிஆர்பிஎஃப்) அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவரும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.
2015-ம் ஆண்டு சோனிபத்தில் துணை ராணுவ அதிகாரி சஞ்சன் பால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஹரியாணாவில் உள்ள பஞ்சி கிராமத்தின் முன்னாள் தலைவர் சுரேந்தர் சிங், அவரது மகன் பிரவீண் ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். கடந்த 2013ஆம் ஆண்டு சுரேந்தர் சிங்கின் மற்றொரு மகன் ஹர்பாலை, சஞ்சன் பாலின் உறவினர் கொலை செய்திருந்தார். இதனால்  முன்விரோதம் காரணமாக சஞ்சன் பால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 இந்நிலையில் தலைமறைவாக இருந்த சுரேந்தர் சிங், பிரவீண் ஆகியோரின் விவரம் அளிப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என்று போலீஸார் அறிவித்திருந்தனர்.
சுரேந்தர் சிங்கையும், பிரவீணையும் அலிபூர் பகுதியில் இருந்து போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT