மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் மாணவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தில்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் அமைப்பான தில்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர் பேரவை (டியுடிஎஸ்எஃப்) சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லி பல்கலைக்கழக வடக்கு கேம்பஸில் உள்ள கலைப் புலத்தின் பிரதான நுழைவுவாயில் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாணவ, மாணவிகள் சுமார் 50 பேர் கலந்துகொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலும், அண்மையில் தற்கொலை செய்துகொண்ட தமிழக மாணவி அனிதாவுக்கு நீதி வழங்கக் கோரி அவர்கள் குரல் எழுப்பினர். அவரது உருவப்படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தில்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அருண், இணை ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.