புதுதில்லி

தமிழக பள்ளி நூலகப் புத்தக கொள்முதல் விவகாரம்: விசாரணை கோரிய மனு தள்ளுபடி

DIN

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நூலகங்களுக்கு புத்தகங்கள், ஆய்வகப் பொருள்கள் ஆகியவை கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் கடந்த மே 25-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெறுவதில்லை. 
ஆய்வகப் பொருள்கள் மற்றும் புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்படுவது மட்டுமின்றி தரம் குறைந்தவையாகவும் உள்ளன. இந்தப் பொருள்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவதில் பெரும் முறைகேடு நடைபெறுகிறது. 
இதில் உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர். 2018-19 கல்வியாண்டில் ஆய்வகப் பொருள்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவது தொடர்பாக நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க மத்திய அரசுக்கும், தமிழக டிஜிபிக்கும், தமிழக ஊழல்தடுப்பு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜெய் சுகின் ஆஜரானார். மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன எனத் தெரிவித்தும், மனு விசாரணைக்கு உகந்ததது அல்ல என்றும் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருக்குவளையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

சீா்காழி சாய்பாபா கோயிலில் ராம நவமி வழிபாடு

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT