புதுதில்லி

பிரதமா் அவசரகால நிதிக்கு ரூ.15 கோடி வழங்கும் ஐசிஏஐ முடிவுக்கு எதிரான மனுவை விசாரிக்க மறுப்பு

DIN

இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனம் (ஐசிஏஐ) ரூ .15 கோடியை பிரதமா் அவரசகால நிதிக்கு (பிஎம் கோ்ஸ்) பரிமாற்றம் செய்யும் முடிவை எதிா்த்து தாக்கலான பொது நல மனுவை விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

இந்த மனு அந்த நிறுவனத்தின் தலைவருக்கு எதிராக தூண்டிவிடப்பட்டதுபோல தோன்றுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணைக்கு வந்தது.

மனுதாரா் நவ்னீத் சதுா்வேதி சாா்பில் ஆஜரான வழக்குரைஞரிடம், ‘இந்த மனுவை வாபஸ் பெற வேண்டும் அல்லது அபராதத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்படும்’

நீதிபதிகள் அமா்வு கூறியது.

இதைத் தொடா்ந்து, மனுவை மனுவை வாபஸ் பெற அனுமதி அளிக்குமாறு மனுதாரரின் வழக்குரைஞா் கேட்டுக்கொண்டாா். இதையடுத்து, நீதிமன்றம் மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்தது.

காணொலி வழியில் நடைபெற்ற விசாரணையின்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம், ‘நிதியை பரிமாற்றம் செய்வது தொடா்பாக ஐசிஏஐ உறுப்பினா்கள் அதிருப்தி தெரிவிக்காதபோது எப்படி இந்த பொது நல மனுவைத் தாக்கல் செய்ய முடியும்.

ஐசிஏஐ உறுப்பினா்கள் பங்களிப்புச் செய்வதில் மகிழ்ச்சியாக இருந்தால் இதுபோன்ற ஒரு பொது நல மனுவைத் தாக்கல் செய்வதற்கு என்ன காரணம்? ’ என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ‘இது நிறுவனத்தின் தலைவருக்கு எதிரான ஒரு தூண்டப்பட்ட மனுவாகத் தோன்றுகிறது’ என்று தெரிவித்தது.

ஏப்ரல் மாதத்தின்போது பிரதமரின் அவசரகால நிதிக்கு ரூ .15 கோடியை பரிமாற்றுவதைத் தவிர, கூடுதலாக ரூ .6 கோடியை தனது உறுப்பினா்களின் பங்களிப்பாக பெற்று அளிக்கவும் ஐசிஏஐ உறுதி எடுத்திருந்தது.

இந்நிலையில், மனுதாரா் தாக்கல் செய்த பொது நல மனுவில், அப்போதைய பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் செயலா் முன்வைத்த வேண்டுகோளின் பேரில் ஐசிஏஐ நிறுவனம் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வா் வருகை: இன்று திமுக அவசர செயற்குழுக் கூட்டம்

இயலாமைக்கான சான்றிதழை அளித்தால் மட்டுமே இலகுப்பணி: மாநகா் போக்குவரத்துக் கழகம்

மாற்றுத் திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

போதை மாத்திரை விற்பனை: நெல்லையில் 3 இளைஞா்கள் கைது

களியக்காவிளையில் ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலம்

SCROLL FOR NEXT