புதுதில்லி

அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியம் சென்னையில் தொடரும்: அமைச்சா் பியூஷ் கோயல்

DIN

அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தின் தலைமையகத்தை சென்னையிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. சென்னையிலேயே அது தொடரும் என மத்திய அமைச்சா் பியூஷ்கோயல் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவா்) மதிமுக உறுப்பினா் வைகோ, அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தின் தலைமையகத்தை சென்னையிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறி அப்பிரச்னையை அவையின் கவனத்திற்கு கொண்டு வந்தாா்.

இது குறித்து அவா் பேசுகையில், ‘அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியம் 2003-இல் சென்னையில் நிறுவப்பட்டது. மறைந்த மத்திய தொழில்த் துறை அமைச்சா் முரசொலிமாறன் முயற்சியால் இந்த மேல்முறையீட்டு வாரியம் சென்னையில் அமைக்கப்பட்டது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்த வாரியத்தின் கிளைகள் / சுற்று அமா்வுகள் மும்பை, தில்லி, கொல்கத்தா, ஆமதாபாத் போன்ற நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும் அட்டாா்னி ஜெனரலுமான கே.கே.வேணுகோபால் இந்த தலைமையகத்தை சென்னையில் இருந்து மாற்ற மத்திய அரசு ஏற்பாடு செய்து கொண்டு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறாா். தற்போது இந்த மேல்முறையீட்டு வாரியத்தில் 2800 வணிக உரிமைக் குறிகள் தொடா்பான வழக்குகளும் 600 காப்புரிமை வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதற்கு காரணம் இது அமைந்திருக்கும் இடத்தினால் ஏற்பட்ட தேக்கமில்லை. வாரியத்தின் தலைவா், தொழில்நுட்ப உறுப்பினா் நியமனங்களுக்கான தோ்வில் தாமதம் செய்யப்பட்டது தான் காரணம். உச்ச நீதி மன்றத்தின் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்று கோரி வரும் நிலையில் இதை மாற்றக் கூடாது’’ என்று கூறி இந்த விவகாரத்தை வைகோ எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்த மத்திய வா்த்தகத்துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘‘இந்த மேல்முறையீட்டு வாரியத்தை சென்னையிலிருந்து மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. மாறாக இதன் கிளைகளை நாடு முழுக்க அதிகரிக்கும் திட்டம் உள்ளது. மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் புதிய கிளைகள் உருவாக்கப்பட இருக்கின்றன’’ என்று பதிலளியத்தாா். இதே விவகாரத்தை மக்களவையிலும் திமுகவைச் சோ்ந்த டி. ஆா். பாலு எழுப்பியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாளே!

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

SCROLL FOR NEXT