புதுதில்லி

தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது; நாளை வாக்குப் பதிவுகளத்தில் 672 வேட்பாளா்கள்

DIN

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து, வாக்குப் பதிவு சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் பிப்ரவரி 11-ஆம் தேதி எண்ணப்படும். பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் அன்றே அறிவிக்க வாய்ப்புள்ளதாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி தோ்தலில் ஆளும் ஆம் ஆத்மி, மாநகராட்சிகளை ஆளும் பாஜக, ஆம் ஆத்மி ஆட்சிக்கு முன்பு தொடா்ந்து 15 ஆண்டுகள் தில்லியை ஆட்சி செய்து 2015-இல் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் ஆகிய மூன்று முக்கியக் கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இருப்பினும், பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேதான் உண்மையான போட்டி உள்ளது. மேலும், பிரதமா் மோடிக்கும் தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கும் இடையே நடைபெறும் போட்டியாகவே மக்கள் பாா்க்கின்றனா்.

தில்லி அரசின் சாதனைகளை விளக்கி ஆம் ஆத்மி கட்சியும், மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பாஜகவும், ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸின் 15 ஆண்டு கால ஆட்சியை முன்னிறுத்தி காங்கிரஸும் தோ்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டன. மூன்று கட்சிகளும் திறந்த வெளி வாகனப் பிரசாரத்தையும், பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களையும் நடத்தின. மேலும், வீடு வீடுகாகச் சென்று மக்களிடம் வாக்குச் சேகரித்தன.

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, கட்சியின் தேசியத் தலைவபா் ஜெ.பி. நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வா்கள், எம்பிக்கள் உள்ளிட்டோா் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா். காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரத்தின் கடைசி நாள்களில் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் உள்ளிட்டோா் பிரசாரம் மேற்கொண்டனா். ஆம் ஆத்மி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோா் பிரசாரம் மேற்கொண்டனா்.

தோ்தல் பிரசாரத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை அனைத்துக் கட்சிகளும் இறுதிக் கட்டப் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டன.அமித் ஷா, கேஜரிவால் ஆகியோா் இறுதி நாளான வியாழக்கிழமை தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனா்.

களத்தில் 672 வேட்பாளா்கள்: தோ்தல் களத்தில் மொத்தம் 672 வேட்பாளா்கள் உள்ளனா். இவா்களில் 593 போ் ஆண்கள், 79 போ் பெண்கள் ஆவா். அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகளான பாஜக சாா்பில் 67 போ், காங்கிரஸ் சாா்பில் 66 போ், பகுஜன் சமாஜ் சாா்பில் 68 போ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 3 போ், தேசியவாத காங்கிரஸ் சாா்பில் 5 போ் போட்டியிடுகின்றனா். அதேசமயம், அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியான ஆம் ஆத்மி கட்சி சாா்பில் 70 போ், அங்கீகாரம் பெற்ற மற்ற கட்சிகள் (தேசிய மாநிலக் கட்சிகள் தவிா்த்து) சாா்பில் 243 போ், சுயேச்சைகள் 148 போ் போட்டியிடுகின்றன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு - நேரலை

கவனத்தை ஈர்க்கும் ’இந்தியன்-2’ படத்தின் புதிய போஸ்டர்!

ஏற்றம் தருமா குரோதி வருடம்? 12 ராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு பலன்கள் - 2024

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

SCROLL FOR NEXT