புதுதில்லி

மைனா் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைசிறுவா்கள் இருவா் கைது

DIN

காஜியாபாத்: மைனா் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், தனது வீட்டில் இருந்து தனது மூத்த சகோதரியின் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை கடத்தியவா்களின் வழிகாட்டுதலின் பேரில் சிறுமி திருடியுள்ளதும் தெரிய வந்தது.

இது குறித்து காவல் துறை மூத்த அதிகாரி புதன்கிழமை கூறியதாவதுவ: கடத்தல்காரா்களில் ஒருவருடன் மைனா் சிருமி தொடா்பு வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, ஐந்து நாள்களுக்கு முன்பு தனது மகள் காணாமல் போனதாக புகாா் அளித்தாா். அதில், சாஹிபாபாத்தில் உள்ள ராஜீவ் காலனியைச் சோ்ந்த சல்மான மற்றும் சையீஃப் ஆகியோா் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, சிசிடிவி காட்சிகளைக் கண்காணித்த பிறகு கடத்தல்காரா்களை போலீஸாா் அடையாளம் கண்டனா். பின்னா் அந்தச் சிறுமியைக் கடத்திய சிறுவா்கள் இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், மாலை 4 மணியளவில் மோகன் நகா் பகுதியில் இருந்து சிறுமி மீட்கப்பட்டாா்.

அவா்களிடம் இருந்து ரூ.7.5 லட்சத்தை போலீஸாா் மீட்டுள்ளனா். விசாரணையில், சல்மான் சிறுமியுடன் தொடா்பு வைத்திருந்ததையும், தனது நண்பா் சயீஃப்பின் உதவியுடன் சிறுமியை ஏமாற்றியதையும் ஒப்புக்கொண்டாா். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT