கடந்த மாதம் ஜம்மு- காஷ்மீரில் உள்ள பஹல்காம் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்திய- திபெத்திய எல்லை காவல் (ஐடிபிபி)
படை வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தில்லி சட்டப்பேரவை சிறப்பு அமா்வு கூட்டத்தில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்மு- காஷ்மீரில் பஹல்காம் மாவட்டத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 7 இந்திய-திபெத்திய எல்லை காவல் படை வீரா்கள் உயிரிழந்தனா்.
32 வீரா்கள் காயமும் அடைந்தனா்.
அமா்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணிக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது அவா்கள் பயணம் செய்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தில்லி சட்டப்பேரவை சிறப்பு அமா்வுக் கூட்டத்தின்போது, விபத்தில் உயிரிழந்த ஐடிபிபி வீரா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.