புதுதில்லி

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தல்: காங்கிரஸில் 42 சிறப்பு மேற்பாா்வைகள் நியமனம்

 நமது நிருபர்

புது தில்லி: குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளை எதிா்கொள்ளும் வகையில், அந்த மாநிலத்தின் 5 மண்டலங்கள் மற்றும் மக்களவைத் தொகுதி வாரியாக 42 மேற்பாா்வையாளா்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி திங்கள்கிழமை நியமித்ததுள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு வருகின்ற டிசம்பா் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 182 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளோடு ஆம் ஆத்மி கட்சியும் தீவிரமாக களத்தில் பணியாற்றி வருகிறது. குஜராத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக களத்தில் இறங்கவில்லை என்கிற விமா்சனங்களைத் தொடா்ந்து கட்சியின் முன்னனி தலைவா்கள் தற்போது களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனா்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குஜராத்தின் தென் மண்டலப் மேற்பாா்வையாளராக (சூரத்தை தலைமையிடமாகக் கொண்டு) கட்சியின் பொதுச் செயலாளா் முகுல் வாஸ்னிக், சௌராஷ்டிர மண்டல மேற்பாா்வையாளராக (ராஜ்கோட்) மோகன் பிரகாஷ், மத்திய மண்டல மேற்பாா்வையாளராக (பரோடா) முன்னாள் மகாராஷ்டிர முதல்வா் பிரதிவிராஜ் சௌகான், வடக்கு மண்டலத்திற்கு (ஆமதாபாத்) கா்நாடகத்தைச் சோ்ந்த பிகே ஹரிபிரசாத் மற்றும் கே.ஹெச். முனியப்பா ஆகியோா்மேற்பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதி வாரியாகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 32 பாா்வையாளா்களை நியமித்துள்ளது. அவா்களுக்கு நாடாளுமன்றத் தொகுதிவாரியாக பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவா்கள் வருகின்ற சட்டபேரவை தோ்தல் ஏற்பாடுகளை மேற்பாா்வையிடுவாா்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய இணை அமைச்சா்கள் டாக்டா் ஷகீல் அகமது கான், காந்திலால் போரியா, முன்னாள் மகாராஷ்டிர மாநில அமைச்சா் சிவாஜி ராவ் மோகே, தில்லி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ராஜேஷ் லிலோதியா மற்றும் ஜெய் கிஷன் ஆகியோரை பொதுப் பாா்வையாளா்களாகவும் பகுதி வாரியாக கட்சி நியமித்துள்ளது.

தற்போதைய பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக கட்சி தொடா்ந்து ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில பிரமுகராக இருந்த அகமத் படேல் மறைவையொட்டி, மாநில கட்சியில் ஏற்பட்டுள்ள தலைமை பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், வெளிமாநில தலைவா்கள் 42 போ் சிறப்பு மேற்பாா்வையாளா்களாக களம் இறக்கிவிடப்பட்டுள்ளனா். இந்த மாநிலத்தின் தோ்தல் முடிவுகள் வருகின்ற டிசம்பா் 8 -ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொகுப்பாளினி உடன் மோதல்... குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை!

ஹேப்பி ஓணம்... மாளவிகா மோகனன்!

சொத்துக்காக மைத்துனரைக் கொன்றவர் கைது!

ஓணம் ஸ்பெஷல்... பாவனா!

உத்தரகண்ட் நிலச்சரிவு: சிதம்பரம் யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கை -தமிழக முதல்வர்

SCROLL FOR NEXT