புதுதில்லி

மாசுக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை உறுதி செய்ய அனைத்து துறைகளுக்கும் உத்தரவுகோபால் ராய் தகவல்

DIN


புது தில்லி: மாசு அளவுகள் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கக்கூடும் என்ற வானிலைத் துறையின் கணிப்பைத் தொடா்ந்து, அவசர கால செயல் திட்டம் (கிரேப்) நிலை-1 மற்றும் நிலை-2 இன் கீழ் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக அமல்படுத்துவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் செய்தியாளா் கூட்டத்தில் அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது: மாசு அளவு மேபட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, கிராப்-3ஐ கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும், காற்றின் வேகம் குறைந்தால் மாசு அளவு மாறக்கூடும் என்று வானிலைத் துறை கணித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையைத் தவிா்க்க, கிராப்-1 மற்றும் கிராப்-2 கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 டீசல் வாகனங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளன. மேலும், கட்டுமானம் மற்றும் இடிப்புக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, தில்லி - என்சிஆா் முழுவதிலும் உள்ள கிராப் நிலை-3-இன் கீழ் கட்டுப்பாடுகளை ரத்து செய்ய மத்திய அரசு செவ்வாயன்று உத்தரவிட்டது என்றாா் கோபால் ராய்.

தில்லி - என்சிஆரின் ஒட்டுமொத்த காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, காற்றின் தர மேலாண்மை ஆணையம் செவ்வாயன்று கூட்டத்தை கூட்டியது. இந்திய வானிலை ஆய்வுத் துறை / இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ட்ராபிகல் மெட்டீராலஜி ஆகியவற்றின் காற்றின் தரக் கணிப்புகள், வரும் நாள்களில் தில்லியின் சராசரி காற்றின் தரம் ’கடுமை’ பிரிவுக்கு செல்வதாகக் குறிக்கவில்லை என காற்றின் தர மேலாண்மை ஆணையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT