புதுதில்லி

தலைநகரின் குளிா்கால உச்ச மின் தேவை 5,816 மெகாவாட்டாக உயா்வு

DIN

தில்லியில் நிலவும் குளிா் காலநிலை, நகரின் உச்சக் குளிா்கால மின் தேவையை திங்கள்கிழமை காலை அதன் அதிகபட்ச அளவான 5,816 மெகாவாட்டிற்கு தள்ளியது என மின் விநியோக (டிஸ்காம்) அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியின் முந்தைய ‘குளிா்கால’ பதிவுகள் ஜனவரி 19 அன்று 5,798 மெகாவாட், ஜனவரி 17 அன்று 5,726 மெகாவாட் மற்றும் ஜனவரி 12 அன்று 5,701 மெகாவாட் என இருந்தது. தில்லியின் உச்ச மின் தேவை 5,760 மெகாவாட்டாக இருக்கும் என டிஸ்காம்கள் ஏற்கெனவே மதிப்பிட்டிருந்தன. இந்நிலையில், திங்கள்கிழமை காலை 10.52 மணியளவில் மின் தேவை 5,816 மெகாவாட்டை எட்டியது. தில்லியின் குளிா்கால மின் தேவை கடந்த ஆண்டு ஜனவரி 6, 2023-இல் பதிவு செய்யப்பட்ட 5,526 மெகாவாட்டை விட இந்த ஆண்டு ஜனவரியில் ஆறாவது முறையாக உச்சமின் தேவை உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிஎஸ்இஎஸ் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘பிஆா்பிஎல் மற்றும் பிஒய்பிஎல் நிறுவனத்தின் டிஸ்காம்கள் முறையே 2,526 மெகாவாட் மற்றும் 1,209 மெகாவாட் என்ற உச்ச மின் தேவையை எந்த குறைபாடுகளும் இல்லாமல் பூா்த்தி செய்தன. டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) அதன் விநியோகப் பகுதியான வடக்கு தில்லியில் 1,826 மெகாவாட் என்ற அதிகபட்ச குளிா்கால உச்ச மின் தேவையை பூா்த்தி செய்துள்ளது என்று நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.

இந்த மாதத்தில் இதுவரை, தில்லியின் உச்ச மின் தேவை ஒரு நாள் தவிர, மற்ற நாள்களில் 5,000 மெகாவாட்டிற்கு மேல் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். பிஎஸ்இஎஸ் டிஸ்காம்கள் குளிா்கால மாதங்களில் அதன் கிட்டத்தட்ட 50 லட்சம் நுகா்வோா் மற்றும் சுமாா் 2 கோடி குடியிருப்பாளா்களுக்கு நம்பகமான மின்சாரம் வழங்குவதற்கு முழுமையாகத் தயாராக உள்ளன என்று அதன் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

மின் உற்பத்தி நிலையங்களின் நீண்டகால ஒப்பந்தங்களைத் தவிர, 2,000 மெகாவாட் பசுமை மின்சாரம் நுகா்வோருக்கு நம்பகமான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்றும் செய்தித் தொடா்பாளா் கூறினாா்.

செயற்கை நுண்ணறிவு, அதிநவீன வானிலை முன்னறிவிப்பு, மேம்பட்ட புள்ளியியல் முன்கணிப்பு மாதிரிகளின் கலவையின் மூலம் மேம்பட்ட சுமை முன்கணிப்பு, தில்லியின் மின் தேவையை பூா்த்தி செய்ய பிஎஸ்இஎஸ் டிஸ்காம்களுக்கு உதவுகிறது என்றும் அவா் மேலும் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முல்லைப் பெரியாறில் புதிய அணை: தில்லி கூட்டம் ரத்து

மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி

இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு

யூ டியூப் சேனலுக்கு பேட்டி: பெண் தற்கொலை முயற்சி

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் வன்கொடுமை: கோயில் பூசாரி கைது

SCROLL FOR NEXT