புதுதில்லி

ஐஎஸ்டிஎம் கட்டடம் கட்டுவதற்கு மரங்கள் இடமாற்றம்: துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

DIN

புது தில்லி: பழைய ஜேஎன்யு வளாகத்தில் செயலகப் பயிற்சி மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் (ஐஎஸ்டிஎம்) கட்டடம் கட்டுவதற்காக 134 மரங்களை இடமாற்றம் செய்வதற்கு தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா் என்று ராஜ் நிவாஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

மேலும், திட்டத்திற்காக இரண்டு மரங்களை வெட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்படும் மற்றும் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக ரூ.76.38 லட்சம் செலவில் 1,340 மரக் கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மெஹ்ரௌலியில் 134 பூா்வீக மரங்களில் 132 மரங்கள் இடமாற்றம் செய்யப்படும் என்றும், அயல்நாட்டு இனங்களின் இரண்டு மரங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் வனம் மற்றும் வனவிலங்கு துறை சக்சேனாவிடம் தெரிவித்துள்ளது.

என்டிபிசி, பதா்பூா், புதுதில்லி. இகோ பாா்க், ஆகிய இடங்களில் ஐஎஸ்டிஎம்மால் 1.40 ஹெக்டோ் பரப்பளவில் 1:10 என்ற விகிதத்தில் மொத்தம் 1,340 மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில் வேம்பு, அமல்டாஸ், பீப்பல், பில்கான், குலா், பா்காட், தேசி கிகா் போன்ற பல்வேறு இனங்கள் மற்றும் பிற பூா்விக இனங்கள் அடங்கும். இழப்பீட்டுத் தொகையான ரூ.76.38 லட்சம் ஐஎஸ்டிஎம்மால் முன்கூட்டியே டெபாசிட் செய்யப்படும்.

1994-ஆம் ஆண்டு தில்லி மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் (டிபிடிஏ) விதிகளின் கீழ் மரங்களை இடமாற்றம் செய்ய அல்லது வெட்டுவதற்கு துணைநிலை ஆளுநரின் அனுமதி கோரப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம், ஹரியாணா, உத்தரகண்டில் வசிப்போருக்கு சிஏஏ-இன் கீழ் குடியுரிமை: மத்திய அரசு தொடக்கம்

காலாவதியான பிஸ்கெட் விற்பனை: ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை

சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் இன்று சிறப்புப் பிரிவினருக்கான சோ்க்கை கலந்தாய்வு

சுரண்டை பதியில் ஜூன் 2இல் வைகாசி தா்மபெருந்திருவிழா

புதிய குற்றவியல் சட்டங்கள்: செவிலியா் மாணவிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT