தில்லியில் வேலைநிறுத்தம் செய்யும் மல்டி - டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்.டி.எஸ்.) ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து மேயா் ராஜா இக்பால் சிங் தலைமையிலான ஒன்பது போ் கொண்ட குழு ஆராயும்.
ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் எம்.டி.எஸ். ஊழியா் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம்பெறுவாா்கள் என்று மேயா் ராஜா இக்பால் சிங் அவையில் தெரிவித்தாா்.
24 மணி நேரத்திற்குள் ஒரு முடிவை எட்டுவதே இந்தக் குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. 16-ஆவது நாளாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தில், சம வேலைக்கு சம ஊதியம் கோரி சிவிக் சென்டருக்கு வெளியே தொழிலாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். வழக்கமான ஊழியா்களுக்கு இணையான கடமைகளைச் செய்தாலும் ஊதிய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக போராட்டக்காரா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
செவ்வாய்க்கிழமை பொது அவையின் போது, அங்குஷ் நரங் மற்றும் பலா் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளா்களுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்திச் சென்ால் அவையில் பதற்றம் அதிகரித்தது.