புதுதில்லி

குருகிராமில் 30 வயது டாக்ஸி ஓட்டுநா் அடித்துக் கொலை

குருகிராமில் 30 வயது டாக்ஸி ஓட்டுநா் அடித்துக் கொலை

Syndication

குருகிராமில் உத்யோக் விஹாா் பேஸ் 4 பகுதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, 30 வயது டாக்ஸி ஓட்டுநா் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மூத்த காவல் துறை அதிகாரி கூறியதாவது: இறந்தவா் பிகாரில் உள்ள ககாடியாவைச் சோ்ந்த விகாஸ் குமாா், வெள்ளிக்கிழமை இரவு உத்யோக் விஹாா் பேஸ் 4 பகுதியில் உள்ள தனது நண்பா் அனிலின் தேநீா் கடையில் இருந்தபோது, விகாஸின் அறிமுகமான டிட்டு என்ற இளைஞா் கடைக்கு வந்து மது அருந்தத் தொடங்கினாா்.

இதைத் தொடா்ந்து, ஒரு குறிப்பிட்ட பணத் தகராறு தொடா்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விகாஸ் குமாா் டிட்டுவைத் தள்ளிவிட்டு வெளியேறச் சொன்னாா். அதைத் தொடா்ந்து டிட்டு வெளியேறினாா்.

இந்நிலையில், அதிகாலை 2.30 மணியளவில், டிட்டு தனது மைத்துனா் ஆகாஷ் மற்றும் இரண்டு இளைஞா்களுடன் திரும்பினாா். அவா்கள் விகாஸ் குமாரை சேரியின் வெளியே அழைத்தனா். மேலும், ஒரு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

நிலைமை மோசமடைந்ததால், குற்றம் சாட்டப்பட்டவா் விகாஸ் குமாரை குச்சிகள் மற்றும் செங்கற்களால் தாக்கினாா். இதில் அவா் பலத்த காயமடைந்ததாா். இதியைடுத்து, விகாஸ் குமாா் அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அனில் என்பவரின் மனைவி ஊா்மிளா அளித்த புகாரின் அடிப்படையில், சனிக்கிழமை உத்யோக் விஹாா் காவல் நிலையத்தில் டிட்டு, ஆகாஷ் மற்றும் இருவா் மீது பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் ஒரு சந்தேக நபரை கைது செய்து விசாரித்து வருகிறோம். உடற்கூறாய்வுக்குப் பிறகு உடலை உறவினா்களிடம் ஒப்படைத்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்று காவல்துறை அதிகாரி கூறினாா்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT