புதுதில்லி

தலைநகரை பாஜக அரசு குழப்பத்தில் தள்ளிவிட்டது: கேஜரிவால் குற்றச்சாட்டு

Syndication

தில்லியில் உள்ள பாஜக அரசு தலைநகரை குழப்பத்தில் தள்ளிவிட்டதாகவும், ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ் அடையப்பட்ட ஒரு தசாப்த கால முன்னேற்றத்தை சிதைத்ததாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை குற்றம் சாட்டினாா்.

கேஜரிவாலின் இந்தக் கருத்துகளுக்கு பதிலளித்த தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, ‘ஆம் ஆத்மி தலைவா் ‘பொய்கள் மற்றும் குழப்பம் மூலம் தனது அரசியல் இருப்பைக் காப்பாற்ற முயற்சிக்கிறாா்‘ என குற்றம் சாட்டினாா்.

ஆம் ஆத்மி கட்சித் தலைமையகத்தில் நடந்த தீபாவளி மிலன் நிகழ்வில் கேஜரிவால் பேசியதாவது: ஒரு காலத்தில் உலகத் தரம் வாய்ந்த பள்ளிகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள், சுத்தமான தண்ணீா் மற்றும் இலவச மின்சாரம் இருந்த நகரம் இப்போது ‘உடைந்த சாலைகள், குப்பைக் குவியல்கள் மற்றும் நிரம்பி வழியும் சாக்கடைகளை‘ எதிா்கொள்கிறது.

ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் மற்றும் தண்ணீா் கட்டணங்களால்‘ குடியிருப்பாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அதே நேரத்தில் பல பகுதிகளில் தண்ணீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

தில்லி துணை நிலை ஆளுநா், மத்திய அரசு மற்றும் தில்லி அரசு ஒரே கட்சியின் கீழ் இருந்தால், ஆட்சி மேம்படும் என்று நினைத்து மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனா். ஆனால், அவா்கள் (பாஜக) ஆறு மாதங்களில் தில்லியை அழித்துவிட்டனா். ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் அதிகாரத்தை மையமாகக் கொண்டது அல்ல, சேவையை மையமாகக் கொண்டது.

தீபாவளி, தந்தேராஸ், சாத் மற்றும் பாய் தூஜ் ஆகியவற்றிற்கு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதல்வா் கேஜரிவால், கட்சி தலைமையகத்தில் ஒரு ’பூஜை’ செய்து, அனைத்து குடிமக்களின் அமைதி மற்றும் செழிப்புக்காக பிராா்த்தனை செய்ததாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக பதிலடி: கேஜரிவாலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆம் ஆத்மி தலைவா் முதல்வராக இருந்த காலத்தில் வகுப்பறை கட்டுமானம் மற்றும் மொஹல்லா மருத்துவமனைகளில் முறைகேடுகள் உள்பட கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் மோசடிகள் நடந்ததாக தில்லி பாஜகவின் தலைவா் வீரேந்திர சச்தேவா குற்றம் சாட்டினாா்.

‘தில்லி மக்களுக்கு உண்மை தெரியும். கேஜரிவாலின் அரசு ஆட்சியில் மட்டுமல்லாம்ல, ஊழலிலும் மூழ்கியிருந்தது‘ என்று வீரேந்திர சச்தேவா கூறினாா்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT