உதவி நிரலர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு வெளியீடு
நாகர்கோவில், ஜூன் 24: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிரலர் பணியிடத்துக்கான பதிவு மூப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பெ. ரவீந்திரன் வெளி
நாகர்கோவில், ஜூன் 24: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிரலர் பணியிடத்துக்கான பதிவு மூப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பெ. ரவீந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நகராட்சி நிர்வாக இயக்குநரால் உதவி நிரலர் பணியிடங்கள் குறித்த பட்டியல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரிடம் கோரப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் பணியிடத்துக்கு அறிவியலில் இளநிலை (பிஎஸ்ஸி) பட்டம் மற்றும் புள்ளியியலை ஒரு பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பொருளாதாரம், வணிகவியல் பாடம் படித்து தேர்ச்சி. அத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் முதுகலைப் பட்டயம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும். போதுமான தமிழறிவு இருக்க வேண்டும்.
வயது வரம்பு- 1.7.2010-ம் தேதி இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 40 வயது, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்பட்ட வகுப்பினருக்கு 37 வயது, முற்பட்ட வகுப்பினருக்கு 35 வயது இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ள பதிவுதாரர்கள், உரிய பதிவு மூப்பு உள்ளவர்கள் 1:5 என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.
தமிழகத்திலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்தும் பெறப்பட்ட பட்டியல்கள் வேலைவாய்ப்புத்துறை ஆணையரால் ஒருங்கிணைக்கப்பட்டு, பதிவு மூப்புள்ள நபர்கள் நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.
பதிவு மூப்பு விவரம்:
ஆதிதிராவிடர் முன்னுரிமை உள்ளவர் (பெண்கள்), (பொது)- உயர்பதிவேட்டில் உள்ள அனைவருக்கும். ஆதிதிராவிடர் முன்னுரிமை அற்றவர் (பெண்கள்)- 31.12.2002. (பொது)- 27.2.2006. மிகவும் பிற்படுத்தப்பட்டவர் முன்னுரிமை உள்ளவர்- உயர்பதிவேட்டில் உள்ள அனைவரும். மிகவும் பிற்படுத்தப்பட்ட முன்னுரிமை இல்லாதவர் (பெண்கள்)- 21.10.1999. (பொது)- 12.8.2004. பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்த முன்னுரிமை உள்ளவர்- உயர்பதிவேட்டில் உள்ள அனைவரும். பிற்பட்ட இதரர்- முன்னுரிமை உள்ளவர்- 19.4.2005 வரை பதிவு செய்துள்ள முன்னாள் படைவீரர், முன்னாள், இந்நாள் படைவீரரைச் சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்ட மற்றும் முற்பட்ட வகுப்பினர்- முன்னுரிமையற்றவர் (பெண்கள்)- 27.3.1997. (பொது)- 17.7.1997.
இத் தகுதியுள்ள பதிவுமூப்புக்குள்பட்ட நபர்கள் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுவதை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் உடனே வந்து உறுதி செய்து கொள்ள வேண்டும். பி.எஸ்.ஸி. பட்டம் பெற்று புள்ளியியல் பாடத்தை முதன்மை மற்றும் துணைப்பாடமாகக் கொண்டு, பிற தகுதிகள் உடையவர்களும் வேலைவாய்ப்பு அலுவலரை அணுக வேண்டும். உதவி நிரலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பணியிடத்துக்கான தகுதியுடைய பதிவுதாரர்களின் விவரங்கள் கன்னியாகுமரி மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் மட்டும் வேலைவாய்ப்பு அலுவலரை அணுக வேண்டும். இணையதள முகவரி - ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ஹ்ஹந்ன்ம்ஹழ்ண்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்