முகப்பு
திருநெல்வேலி

தொழிலதிபர்களுக்குஇபிஎப் ஆணையர் வேண்டுகோள்

இ.பி.எப். அலுவலக கணினி தொகுப்புக்கு தொழிலாளர்களை குறித்த தகவல்களை உடனே அனுப்ப வேண்டும் என்று தொழிலதிபர்களை அதன் ஆணையர் செüரப் ஸ்வாமி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Updated On : 12 மே 2013, 5:52 am IST
பகிர்:

இ.பி.எப். அலுவலக கணினி தொகுப்புக்கு தொழிலாளர்களை குறித்த தகவல்களை உடனே அனுப்ப வேண்டும் என்று தொழிலதிபர்களை அதன் ஆணையர் செüரப் ஸ்வாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சட்டம் 1952-ன்கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்கள் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் இ.பி.எப். குறித்த விவரங்களை, இபிஎப் அலுவலகத்தின் மின்னணு தொகுப்பில் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

 ஆனால் பல நிறுவனங்கள், தொழிலாளர்கள் குறித்த தேவையான தகவல்களை கணினி வழியாக அனுப்பாததால் திட்டமிட்டபடி கடந்த மாதம் 30-ம் தேதிக்குள் இப்பணி நிறைவடையவில்லை. எனவே தகவல் தொகுப்புகளை அனுப்பாத நிறுவனங்கள் அவற்றை தங்களது இ.பி.எப். அலுவலக கணினி தொகுப்புக்கு உடனே அனுப்ப வேண்டும். மின்னணு தகவல் தொகுப்புக்காக தொழிலாளர் குறித்த தேவையான விவரங்களை அனுப்பாத தொழிலதிபர்கள், நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விளக்கங்கள் பெறுவதற்கு 0462-2554606 என்ற தொலைபேசி எண்ணில் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.