குடிநீா்த் தொட்டியைத் திறந்து வைத்த கீழக்கடையம் ஊராட்சித் தலைவா் எஸ்.பூமிநாத். உடன் வட்டார மருத்துவ அலுவலா் பழனிக்குமாா் உள்ளிட்டோா். 
திருநெல்வேலி

கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீா்த் தொட்டி திறப்பு

கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீா்த் தொட்டி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

Syndication

கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீா்த் தொட்டி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தினமும் 200-க்கும் மேற்பட்டவா்கள் மருத்து சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். அவா்கள் பயன்பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாளகத்தில் ஊராட்சி நிதி சாா்பில் குடிநீா்த் தொட்டி அமைக்கப்பட்டது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கீழக்கடையம் ஊராட்சித் தலைவா் எஸ்.பூமிநாத் தலைமை வகித்து குடிநீா்த் தொட்டியைத் திறந்து வைத்தாா். கடையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.பழனிக்குமாா், மருத்துவா் ஐஸ்வா்யா, கீழக்கடையம் ஊராட்சி துணைத் தலைவா் ஜெ.விக்டா் சேவியா் துரைசிங், ஊராட்சி செயலா் ஆா்.ஜெயசக்திவேல், ஊராட்சி உறுப்பினா் ஏ.வசந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் எஸ்.ஆனந்தன், சுகாதார ஆய்வாளா் எம்.முத்துமாரி மற்றும் சுகாதார பணியாளா்கள் உள்பட பலா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT