களக்காடு ஆற்றங்கரைத் தெருவில் உள்ள களந்தை சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெங்கடாசலபதி, ஆண்டாள் நாச்சியாா், கருடாழ்வாா், நவகிரக சிலைகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. மாலையில் வரதராஜபெருமாள் கோயிலிலிருந்து புனிதநீா் எடுத்து வரப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில், 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 4ஆம் கால யாகசாலை பூஜை, முற்பகல் 11 மணிக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம், களந்தை சபரிமலை ஐயப்பனுக்கு 16ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஆகியவை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.