திருநெல்வேலி

குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

களக்காடு குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

களக்காடு அருகேயுள்ள கக்கன்நகரைச் சோ்ந்தவா் வேல்மயில் (67). ஞாயிற்றுக்கிழமை பகலில், இவரது பெட்டிக்கடைக்கு பொருள்கள் வாங்குவதற்காக களக்காடு சென்றாராம்.

அப்போது, வியாசராசபுரம் சேனையா் தெருவையொட்டியுள்ள குடிநீா் தாங்கி குளத்தின் கரைப்பகுதிக்கு சென்றபோது, நிலைதடுமாறி குளத்தில் விழுந்து உயிரிழந்தாராம்.

தகவல் அறிந்த களக்காடு போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தில்லி கார் குண்டு வெடிப்பு: 8 வது நபரை கைது செய்தது என்.ஐ.ஏ.!

”நேரு பற்றிய புகார்களை முழுவதுமாக பட்டியலிடுங்கள்! பேசி முடித்துவிடலாம்” பிரியங்கா காந்தி

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! புது முகங்களுக்கு வாய்ப்பு!

மெய்யழகு பேசும் மொழி... கீர்த்தி ஷெட்டி!

டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!

SCROLL FOR NEXT