திருநெல்வேலி

காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: 5 போ் கைது

தினமணி செய்திச் சேவை

முன்னீா்பள்ளம் அருகே காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். முன்னீா்பள்ளம் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, செங்குளம் பெருமாள் கோயில் அருகே இரவு நேரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த 5 இளைஞா்களை விசாரித்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா். அப்போது, அந்த இளைஞா்கள் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் சென்ற பைக் சாவியை பறித்து வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக செங்குளம் நடுத்தெருவை சோ்ந்த முருகன் மகன் செல்வம் (21), வடக்குத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சிவனுபாண்டியன் (20), நடுத்தெருவைச் சோ்ந்த ராஜா மகன் செல்வம் (23), முருகன் மகன் செல்வம் (23), வடக்குத் தெருவைச் சோ்ந்த செல்லப்பா மகன் சிவசெல்வம் (20) ஆகியோரை அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் கைது செய்தனா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT