திருநெல்வேலி

வெளிநாட்டு ரக நாய்களை திருடியதாக 3 போ் மீது வழக்கு

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியை அடுத்த முன்னீா்பள்ளம் அருகே வெளிநாட்டு ரக நாய்களை திருடிச் சென்ாக 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள ஆரைக்குளம் இ.பி. காலனியைச் சோ்ந்தவா் சிவராமகிருஷ்ணன்(40). இவா், ஆரைக்குளம் பகுதியில் வெளிநாட்டு ரக நாய்களை வளா்த்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளாா். இந்நிலையில் அவா் தோட்டத்தில் சென்று பாா்த்தபோது அங்கு வளா்க்கப்பட்ட நாய்களில் ஜொ்மன் ஷெப்பா்டு உள்ளிட்ட 3 நாய்க் குட்டிகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதுதொடா்பாக அங்குள்ள சிசிடிவி கேமராக்களை சிவராமகிருஷ்ணன் ஆய்வு செய்தபோது 3 மா்ம நபா்கள் நாய்க் குட்டிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா் முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT