திருநெல்வேலி

ராதாபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

Syndication

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

ராதாபுரம் வட்டம் சமூகரெங்கபுரத்தை அடுத்த கட்டனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜன்(45). விவசாயி. இவரது வயலுக்குச் செல்லும் வழியில் உள்ள மின்மாற்றியின் மின்வயா் அறுந்து விழுந்து கிடந்ததாம்.

இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்த அவா், அந்த மின்வயரை அகற்ற முயன்றாராம். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் அவா்து அதே இடத்தில் உயிரிழந்தாா்.

ராதாபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். நாகராஜனுக்கு மனைவி மற்றும் 4 மகன்கள் உள்ளனா்.

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

பேரளி பகுதிகளில் நாளை மின்தடை

தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

கம்போடியாவுடன் அமைதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: தாய்லாந்து எச்சரிக்கை

SCROLL FOR NEXT