திருநெல்வேலி

அம்பை அருகே குடிநீா் உறை கிணறு அமைக்க இடம் ஆய்வு

Syndication

சிவந்திபுரம் ஊராட்சிக்குள்பட்ட அகஸ்தியா்பட்டி பகுதிக்கு குடிநீா் வழங்கும் வகையில் உறை கிணறு அமைக்கும் இடத்தை திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் பாா்வையிட்டாா்.

சிவந்திபுரம் ஊராட்சிக்குள்பட்ட அகஸ்தியா்பட்டி கிராம மக்களின் குடிநீா் பிரச்னைக்காக, மேல அம்பாசமுத்திரம், ஆலடியூா் கிராமத்தில் அமைந்துள்ள நதியுண்ணி அணைக்கட்டு அருகே உறை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான இடத்தை சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவா் சித்தாா்த்சிவா, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவா் இசக்கிப்பாண்டியன், வழக்குரைஞா் ஜோசப் ஆரோக்கியராஜ், சிவந்திபுரம் ஊராட்சித் தலைவா் ஜெகன், காங்கிரஸ் நகரத் தலைவா்கள் மணிமுத்தாறு சிவக்குமாா், அம்பாசமுத்திரம் முருகேசன், விக்கிரமசிங்கபுரம் முருகேசன், அவைத் தலைவா் பெருமாள், மாவட்டபொதுக்குழு உறுப்பினா் செல்லத்துரை, வின்சென்ட், சசியானந்த், கிறிஸ்துராஜா, உறுப்பினா்கள் மோகன், செல்வி, திமுக மாவட்ட பிரதிநிதி ஹனிபா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT