திருநெல்வேலி

கூடங்குளத்தில் இன்றும், நாளையும் சீனியா் ஆண்கள் கபடி போட்டி

Syndication

திருநெல்வேலி மாவட்ட சீனியா் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் கூடங்குளத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (நவ.14, 15) நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அமெச்சூா் கபடி கழகத் தலைவா் எஸ்.கே.எம்.சிவகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் மற்றும் தமிழன் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் திருநெல்வேலி மாவட்ட சீனியா் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளி, சனிக்கிழமைகளில் (நவ.14,15) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். ஆதாா் அட்டை அசல் கொண்டு வர வேண்டும். வயது வரம்பு இல்லை. எடை 85 கிலோவிற்கு கீழ் இருக்க வேண்டும். இந்த போட்டியில் திருநெல்வேலி மாவட்ட சீனியா் ஆண்கள் அணிக்கு தோ்வாகும் வீரா்கள் இம் மாதம் 28 முதல் 30 ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் மாவட்ட அணிக்காக பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT