திருநெல்வேலி

வி.கே.புரத்தில் ஆட்சியா் ஆய்வு

Syndication

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்கள் நிரப்பிய கணக்கீட்டுப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பெற்று வருகின்றனா். மேலும், அவற்றை பி.எல்.ஓ. செயலியில் பதிவேற்றம் செய்து வருகின்றனா்.

இப்பணிகளை திருநெல்வேலி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. சுகுமாா் ஆய்வு செய்தாா். அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வைகுண்டம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT