கன்னியாகுமரி

கல்குளம் ஜமாபந்தி நிறைவில் ரூ. 1.26 லட்சம் நல உதவிகள்

கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம கணக்குகளை சரி பார்க்கும் வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) நிறைவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம கணக்குகளை சரி பார்க்கும் வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) நிறைவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் தக்கலை, திருவிதாங்கோடு, குருந்தன்கோடு, குளச்சல், திருவட்டாறு, குலசேகரம் மற்றும் சுற்றுப்புற 66 கிராம மக்கள்  நலிந்தோர் உதவித்தொகை உள்பட 485 கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவற்றில் பரிசீலனைக்குப் பின் 109 மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமை வகித்து, ஆதரவற்றோர் விதைவை சான்று 27, பழங்குடியினர் சான்று 23, சிறு-குறு விவசாயிகள் சான்று 25, தனிபட்டா விண்ணப்பச் சான்று 21 என 96 சான்றுகள் மற்றும் பட்டாக்களை  பயனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும், நலிந்தோர் நல உதவித் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளின் குடும்பங்களுக்கு ரூ.1.26 லட்சத்திற்கான காசோலைகளையும் அவர் வழங்கினார்.   
இதில், கல்குளம் வட்டாட்சியர் புவனேஸ்வரி, தனி வட்டாட்சியர் ராஜாசிங், மண்டல துணை வட்டாட்சியர் ராஜேஷ், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சஜூத்  மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT