கன்னியாகுமரி

பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு ரூ.1.07 கோடி ஈவுத் தொகை அளிப்பு

குமரி மாவட்டத்தில் உள்ள 47 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு ரூ. 1 கோடியே 7 லட்சம் ஈவுத் தொகை வழங்கப்பட்டது.

DIN

குமரி மாவட்டத்தில் உள்ள 47 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு ரூ. 1 கோடியே 7 லட்சம் ஈவுத் தொகை வழங்கப்பட்டது.
குமரி ஆவின் நிறுவனத்தில் இரண்டரை கிலோ ஐஸ்கிரீம் அறிமுக நிகழ்ச்சி, கூட்டுறவு சங்கங்களுக்கு லாபத்தில் ஈவுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன. இதில் வென்னிலா, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி ஆகிய மூன்று ரகங்களில் ஐஸ் கிரீம்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மொத்தம் ஆறு சுவைகளில் ஐஸ் கிரீம் விநியோகிக்க ஆவின் திட்டமிட்டுள்ளது. இதில் ஆவின் நிறுவனத்தின் லாப தொகையில் மாவட்டத்தில் உள்ள 47 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு குமரி பால்வள தலைவர் அசோகன் தலைமை வகித்தார். ஆவின் பொதுமேலாளர் தியானேஷ்பாபு முன்னிலை வகித்தார். இதில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு சட்டபூர்வ நிதியாக ரூ.12.88 லட்சம் அதன் தலைவர் சந்தோஷிடம் வழங்கப்பட்டது. இந்த நிதி கூட்டுறவு வளர்ச்சி மற்றும் கல்விக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பால்வள தலைவர் அசோகன் கூறுகையில், இரண்டரை கிலோ ஐஸ் கிரீம் ரூ. 600-க்கும், சில்லரை விலையில் 50 கிராம் ஐஸ் கிரீம் ரூ. 15-க்கும் பால்பண்ணை வளாகத்தில் அமைந்திருக்கும் ஆவின் பாலகத்தில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் பாலகங்களில் விரைவில் இரண்டரை கிலோ ஐஸ்கிரீம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சிறப்பு வரி கட்டும் அளவுக்கு ஆவின் லாபம் அதிகரித்துள்ளது. ஆவின் லாபத்தில் ரூ. 1 கோடியே 7 லட்சம் ரூபாயை குமரி மாவட்டத்தில் உள்ள 47 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் சந்தோஷ், காரவிளை தொடக்க கூட்டுறவு வங்கித் தலைவர் பொன் சேகர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

SCROLL FOR NEXT