கன்னியாகுமரி

4 வட்டங்களில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களிலும், பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை (செப். 9) நடைபெறுகிறது.

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களிலும், பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் சனிக்கிழமை (செப். 9) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அகஸ்தீசுவரம் வட்டத்தில் அகஸ்தீசுவரம் பேரூராட்சி அலுவலகம்,  தோவாளை வட்டத்தில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகம்,  கல்குளம் வட்டத்தில் வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி அலுவலகம்,  விளவங்கோடு வட்டத்தில் மலையடி ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றில் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் இம்முகாம் நடைபெறுகிறது.
காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது. இதில், அந்தந்த பகுதி மக்கள் புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்கள் இல்லாமல் இதுவரை மின்னணு குடும்ப அட்டை பெற முடியாமல் ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்கள்,  குடும்பத் தலைவரின் புகைப்படம்,  செல்லிடப்பேசி எண்,  ஆதார் எண் பதிவு செய்தல் போன்ற திருத்தங்கள் செய்து விரைவில் மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு மனு அளித்து தீர்வு காணலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மனைவியை குத்திக் கொலை செய்த கணவா்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

கொடிநாள் நிதி வசூல்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT