குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, ஒருவரை கைது செய்தனர்.
நித்திரவிளை அருகேயுள்ள ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த வில்சன் மகன் விஜய். அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் விஜய். இருவரும் குற்ற வழக்கு ஒன்றில் தொடர்புடையவர்களாம். இந்த வழக்கு குழித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய நடராஜன் மகன் விஜய் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது வில்சன் மகன் விஜய் ஆஜராகவில்லையாம். மேலும், வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் விஜய்க்கு பதிலாக வேறொரு நபர் ஆஜரானாராம். இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது வில்சன் மகன் விஜய் ஆஜரானார். அப்போது நடைபெற்ற விசாரணையில், ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின் போது ஆஜரானவர் நடராஜன் மகன் விஜய் அல்ல என்பதும் அவருக்குப் பதிலாக அப்பகுதியைச் சேர்ந்த பாபு மகன் எல்சன் ஆஜரானதும் தெரியவந்தது.
இது குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி களியக்காவிளை போலீஸார் வில்சன் மகன் விஜய், நடராஜன் மகன் விஜய், ஆள்மாறாட்டத்துக்கு உடந்தையாக செயல்பட்ட வழக்குரைஞர் ரொமான்ஸ் மற்றும் கண்டால் தெரியும் ஒருவர் என 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, வில்சன் மகன் விஜய்யை வியாழக்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.