கன்னியாகுமரி

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்குவிண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவர்கள்  கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

சிறுபான்மையின மாணவர்கள்  கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அரசு,  அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்விநிலையங்களில் 1ஆம் வகுப்புமுதல் பி.எச்.டி. வரை பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினரான கிறிஸ்தவர், இஸ்லாமியர்,  புத்த மதத்தினர், சீக்கியர்,  பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர், மாணவிகளுக்கு 2017-18ஆம் கல்வி ஆண்டுக்கு பள்ளிப்படிப்பு,  பள்ளி மேற்படிப்பு,  தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (புதியது மற்றும் புதுப்பித்தல்) பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலவரம்பு 30.08.2017இல் இருந்து  30.09.2017வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே ஏற்கெனவே விண்ணப்பிக்காத சிறுபான்மையின மாணவர், மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற இக்கால நீட்டிப்பின் அடிப்படையில் விண்ணப்பித்து பயனடையலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

புதுப் புது ஏக்கங்கள்... தாரணி!

என்ன பார்வை எந்தன் பார்வை... ஷபானா!

SCROLL FOR NEXT