கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கைவினைக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கும் முகாம் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பூம்புகார் கைத்திற தொழில்கள் வளர்ச்சிக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்த தமிழ்நாடு பூம்புகார் கைத்திற தொழில் வளர்ச்சிக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக கடந்த மே 12-ஆம் தேதி கைவினைக் கலைஞர்களுக்காக இணையதள தகவல் களஞ்சியம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் கைவினைஞர்களின் படைப்பு மற்றும் ஆவணங்கள் சேகரிக்கும் முகாம், இம்மாதம் 9-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
முகாமுக்கு வரும் கைவினைக் கலைஞர்கள், அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் 1,
வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், விருதுகள் விவரம், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல், கண்காட்சிகளில் பங்கேற்ற விவரங்கள், வெவ்வேறு படைப்புகளின் 5 புகைப்படங்கள், ஏற்றுமதி செய்யப்பட்ட கைவினைப் பொருள்களின் விவரங்கள், மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட அடையாள அட்டை நகல் உள்ளிட்ட விவரங்களை கொண்டு வரவேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.