கன்னியாகுமரி

தக்கலை அமலா கான்வென்ட் பள்ளியில் "கலா உத்சவ் 2017'

தக்கலை அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  "கலா உத்சவ் 2017'  தேர்வுக்கான கலைப்போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தக்கலை அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  "கலா உத்சவ் 2017'  தேர்வுக்கான கலைப்போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
ஒரேபாரதம் உயர்வான பாரதம் என்ற மைய கருத்தோடு அகில இந்திய அளவில் "கலா உத்சவ் 2017'  தேர்வுக்கான கலைப்போட்டிகள்  நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலா அறிவுறுத்தலின்படி  நாகர்கோவில்,  தக்கலை,  குழித்துறை  ஆகிய கல்வி மாவட்ட அளவில்  நடைபெற்றது.
தக்கலை கல்வி மாவட்டத்திலுள்ள  அரசுப் பள்ளிகள்  மற்றும்  அரசு உதவி பெறும்  பள்ளிகளிடையே இசை,  நடனம்,  நாடகம்,  காண்கலை ஆகிய போட்டிகள் நடைபெற்றது.  இப்போட்டிகளை மாவட்ட  ஆர்.எம்.எஸ். கண்காணிப்பாளர்  வள்ளிவேலு  தொடங்கிவைத்தார்.
 மாவட்ட   ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன்,  மாவட்ட கண்காணிப்பாளர் சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  பள்ளித் தலைமை ஆசிரியர்  கரோலின்புஷ்பலலிதா முன்னிலை வகித்தார்.  பள்ளி ஆசிரியர்கள், மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.
அனைத்து  கல்வி மாவட்டத்திலும் நடைபெற்ற போட்டிகளில் தேர்வுபெற்றவர்களுக்கு செப். 8ஆம் தேதி குமரி மாவட்ட அளவில், புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில்  போட்டிகள் நடைபெறுகிறது.
மாவட்ட அளவில் வெற்றிபெற்றவர்கள் மாநில அளவில்  நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவார்கள்.   மாநில  அளவில் நடைபெறும் போட்டிகளில் தேர்வு செய்யபடுபவர்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT