பேச்சிப்பாறை அருகே சாலையில் குறுக்காக மரம் விழுந்ததால் பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. மழையின் காரணமாக மலையோரப் பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில் பேச்சிப்பாறை மணியன் குழி பகுதியில் சாலையோரத்தில் நின்ற தாணி மரம் வேருடன் சாய்ந்தது. இதில் அப்பகுதியில் உள்ள உயர்அழுத்த மின்கம்பமும் சாய்ந்தது. மேலும் இதே பகுதியில் கால்வாய் கரையோரப் பகுதியில் நின்ற அயனி மரம் ஒன்றும் சாய்ந்தது. சாலையின் குறுக்காக சாய்ந்த மரத்தை புதன்கிழமை பிற்பகலில் அகற்றியதால் பேச்சிப்பாறை, கோதையாறு உள்ளிட்ட இடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.